ஜியோ போனில் வாட்ஸ் அப் !

கேட்ஜெட்ஸ் சமூக ஊடகம் செய்தி

மெசேஜ் அப்ளிகேஷனான வாட்ஸ் அப், ஸ்மார்ட்போன்களின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. வாட்ஸ் அப் இன்றி யாரும் போன்களை பயன்படுத்துவதில்லை எனலாம்.

ஆண்டிராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டும் வாட்ஸ் அப் சேவை இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் ஜியோ வெளியிட்டுள்ள மலிவு விலை ஜியோ போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் மற்ற போன்களை போல் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது. கஐஓஎஸ்(KaiOS) எனப்படும் இயங்குதளத்தில் தான் ஜியோபோன் வேலை செய்கிறது. இதற்கான வாட்ஸ் அப் அப்ளிகேசனை வாட்ஸ் அப் நிறுவனம் தயாரித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. விரைவில் ஜியோபோனுக்கும் வாட்ஸ் அப் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வாட்ஸ் அப் அப்ளிகேஷன் வெளியானால், ஜியோ போனின் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *