வாட்ஸ் அப் குரூப்பில் இதை கவனித்தீர்களா..?

இணையம் கேட்ஜெட்ஸ் சமூக ஊடகம் செய்தி தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் குரூப்பில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்.

பொதுவாக வாட்ஸ் குரூப்பில் நாம் உறுப்பினராக இருப்போம். அதில் ஆளுக்கொரு தகவல்களை பகிர்ந்துகொள்வோம். இதுதானே வாட்ஸ் அப் குரூப்பில் நான் செய்யக்கூடிய வழக்கமான வேலை.

ஒருவருக்கு எக்கச்சக்கமான வாட்ஸ் அப் குரூப் இருந்தால் ஒவ்வொரு குரூப்பும் எதற்காக உள்ளது? அந்த குரூப்பின் நோக்கம் என்ன ? என்பது தெரியாது குழம்புவோம் இல்லையா? அந்த குழப்பத்தை தீர்க்க தான் வந்து விட்டது ஒரு தீர்வு.

ஆம். வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ள புதிய அம்சங்களில் ஒன்று தான் குரூப் டிஸ்கிரிப்ஷன். குழு பற்றிய விவரங்களை பதிவு செய்யும் வசதி புதிய பதிப்பில் சேர்த்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். நீங்களும் அப்டேட் செய்து பாருங்களேன்.

அதே போல், வாட்ஸ் அப் குரூபில் உள்ள எண்களில் தேசும் வசதியையும் வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

மேலும், வாட்ஸ் அப் அழைப்புகளை வாய்ஸில் இருந்து வீடியோவாகவும், வீடியோவில் இருந்து ஆடியோகவும் மாற்றிக்கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *