ஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது

சமூக ஊடகம்

ஃபேஸ்புக் தகவல் திருட்டைத் தொடர்ந்து உடற்பயிற்சியின் கால அளவைக் குறித்தல் மற்றும் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் கலோரியை அறிந்துகொள்ளுதல் போன்ற உடல்நலம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படும் மை ஃபிட்னஸ் பால் செயலியின் 15 கோடி வாடிக்கையாளர் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மை ஃபிட்னஸ் பால் செயலியின் உரிமையாளரும், அமெரிக்காவின் முன்னணி விளையாட்டுக் காலணிகள் உற்பத்தியாளருமான அண்டர் ஆர்மர் நிறுவனம் அங்கீகரிக்கப்படாத சிலர் மை ஃபிட்னஸ் பால் செயலியிலிருந்து தகவல்களை திருடியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. 15 கோடிக் கணக்குகள் திருடப்பட்டதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் சரியான எண்ணிக்கையை அண்டர் ஆர்மர் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பயனர் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் ஹாஷ் முறையில் பாதுகாக்கப்பட்ட கடவுச்சொல் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *