ஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

செய்தி

ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களின் சந்தா மார்ச் 31 அன்று முடியவுள்ள நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜியோ சிம் பயன்படுத்துவோர், ஜியோடிவி ஆப் மூலம் தொலைக்காட்சிகளை இலவசமாக பார்க்கலாம், மற்ற ஜியோ ஆப்கள் மூலம், இதழ்களை படிக்கலாம், இசை கேட்கலாம், படம் பார்க்கலாம். இது மட்டுமல்லாது  மற்ற நெட்வொர்க் தராத ஏராளமான சலுகைகளையும் பெற்று வந்தனர்.

இதற்காக ஒவ்வொரு வாடிக்கையாளரும் 99 ரூபாய் பணம் செலுத்தி ஜியோ ப்ரைம் மெம்பராக வேண்டும் என்று ஜியோ அறிவித்திருந்தது. அதன்படி பணம் செலுத்தியவர்களுக்கு மேற்கண்ட சலுகைகள் மார்ச் 31, 2018 வரை மட்டுமே பெற முடியும்.

இந்நிலையில், மீண்டும் சந்தா தொகை செலுத்த வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் வாடிக்கையாளருக்கு இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி,  பழைய ப்ரைம் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் ஓராண்டுக்கு ரூ. 99 செலுத்தாமல் அனைத்து இலவச சலுகைகளையும் தொடர்ந்து பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் புதிதாக ஜியோ சிம் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.99 செலுத்தி ப்ரைம் சந்தாதாரராகி ஜியோ அளிக்கும் இலவச சலுகைகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நெட்வொர்க் வருகையால், இந்தியாவில் 4ஜி இணைய வேகத்தில் அளவற்ற இணையசேவையை பொதுமக்கள் பெறமுடிந்தது. அதன் சலுகைகள் தொடர்வதால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *