கணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training

செய்தி

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM அறிவியல் & தொழில்நுட்பத் தமிழ்ப்பேராயத்தில் கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – Fundamentals & Use of Tamil Computing எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு 6வது ஆண்டாக 07.05.2018 முதல் 31.05.2018 வரை நடைபெறவுள்ளது.

கணினியின் அடிப்படைப் பயன்பாடுகளும் அதில் தமிழைப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகளும் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாகத் தங்களது கணினிசார்ந்த பணிகளைத் தாங்களே செய்துகொள்ள முடியும். ஊடகத்துறையிலும் பிற கணினித்துறை சார்ந்த அலுவலகங்களிலும் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் எனப் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். குறைந்தபட்சக் கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு. வயது வரம்பு இல்லை. பயிற்சிக் கட்டணமாக இரண்டாயிரம் ரூபாய் செலுத்தவேண்டும்.

வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிமுதல் மாலை 4.30 மணிவரை நடைபெறும். விண்ணப்பத்தை www.srmuniv.ac.in எனும் இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 30.04.2018. மேலும் விவரங்களுக்கு முனைவர் இல. சுந்தரம், தமிழ்ப்பேராயம், SRM IST, காட்டாங்குளத்தூர் – 603 203. தொலைபேசி: 2741 7379, செல்பேசி: 97909 00230. மின்னஞ்சல்: srmtp.tamilcomputing@srmuniv.edu.in

அனைவரும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் கணினித்தமிழ் பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் ஊடகங்களில் பணிவாய்ப்பு பெறும் வகையில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *