உஷார்! மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…

செய்தி

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிரிச்சி முடிவு வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி ஆகியோர் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சியில், மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்து உள்ளது.

வலி தாங்க முடியாமல் வலி நிவாரணிகளை எடுத்து, அதற்கு அடிமையாகி விடுவதுபோல, ஒரு கட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கு காரணம், அவர்கள் சக மனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமல் போய்விடுவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உஷார் நண்பர்களே. ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தி, உறவினர்கள், நண்பர்களுடன் அதிகம் செலவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *