கணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM அறிவியல் & தொழில்நுட்பத் தமிழ்ப்பேராயத்தில் கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – Fundamentals & Use of Tamil Computing எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு 6வது ஆண்டாக 07.05.2018 முதல் 31.05.2018 வரை நடைபெறவுள்ளது. கணினியின் அடிப்படைப் பயன்பாடுகளும் அதில் தமிழைப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகளும் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாகத் தங்களது கணினிசார்ந்த பணிகளைத் தாங்களே செய்துகொள்ள முடியும். ஊடகத்துறையிலும் பிற கணினித்துறை சார்ந்த அலுவலகங்களிலும் பணிவாய்ப்புகளைப் பெறமுடியும். பள்ளி, […]

Continue Reading

உஷார்! மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் வரிசை கட்டிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிரிச்சி முடிவு வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி ஆகியோர் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சியில், மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை […]

Continue Reading

யூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்

அமெரிக்காவில் உள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் சான் புரூனோவில் உள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர், அங்கிருந்த ஊழியர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; நால்வர் படுகாயமடைந்தனர். மிகக் கொடூரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்தப்பெண் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். கூகுள் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு குறித்து கூகுள் […]

Continue Reading

ஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களின் சந்தா மார்ச் 31 அன்று முடியவுள்ள நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜியோ சிம் பயன்படுத்துவோர், ஜியோடிவி ஆப் மூலம் தொலைக்காட்சிகளை இலவசமாக பார்க்கலாம், மற்ற ஜியோ ஆப்கள் மூலம், இதழ்களை படிக்கலாம், இசை கேட்கலாம், படம் பார்க்கலாம். இது மட்டுமல்லாது  மற்ற நெட்வொர்க் தராத ஏராளமான சலுகைகளையும் பெற்று வந்தனர். இதற்காக ஒவ்வொரு வாடிக்கையாளரும் 99 ரூபாய் பணம் செலுத்தி ஜியோ ப்ரைம் மெம்பராக வேண்டும் என்று ஜியோ அறிவித்திருந்தது. அதன்படி […]

Continue Reading

ஜியோ போனில் வாட்ஸ் அப் !

மெசேஜ் அப்ளிகேஷனான வாட்ஸ் அப், ஸ்மார்ட்போன்களின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. வாட்ஸ் அப் இன்றி யாரும் போன்களை பயன்படுத்துவதில்லை எனலாம். ஆண்டிராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டும் வாட்ஸ் அப் சேவை இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் ஜியோ வெளியிட்டுள்ள மலிவு விலை ஜியோ போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் மற்ற போன்களை போல் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது. கஐஓஎஸ்(KaiOS) எனப்படும் இயங்குதளத்தில் தான் ஜியோபோன் வேலை […]

Continue Reading

வாட்ஸ் அப் குரூப்பில் இதை கவனித்தீர்களா..?

வாட்ஸ் அப் குரூப்பில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம். பொதுவாக வாட்ஸ் குரூப்பில் நாம் உறுப்பினராக இருப்போம். அதில் ஆளுக்கொரு தகவல்களை பகிர்ந்துகொள்வோம். இதுதானே வாட்ஸ் அப் குரூப்பில் நான் செய்யக்கூடிய வழக்கமான வேலை. ஒருவருக்கு எக்கச்சக்கமான வாட்ஸ் அப் குரூப் இருந்தால் ஒவ்வொரு குரூப்பும் எதற்காக உள்ளது? அந்த குரூப்பின் நோக்கம் என்ன ? என்பது தெரியாது குழம்புவோம் இல்லையா? அந்த குழப்பத்தை தீர்க்க தான் வந்து விட்டது ஒரு தீர்வு. […]

Continue Reading

நம்ம ஊரில் கூகுள் !

கூகுள் என்றாலே பிரம்மாண்டம் தான். அந்த பிரம்மாண்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் எனும் போது கணினித்தமிழ் வளர்ச்சி மேலோங்கி பயணிக்கிறது என்பதில் உள்ளபடியே மகிழ்ச்சி. தமிழ் சேவையில் கூகுள் ஏற்கனவே காலடி வைத்தாலும் , தமிழ் மண்ணில் இன்று (மார்ச்13) தான் முதன்முறையாக காலடி வைத்திருக்கிறது. ஆம். வழக்கமாக பெங்களூரு, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்திவந்த கூகுள் முதன்முறையாக தமிழகத்தில் #Googleforதமிழ் என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் விளம்பர சேவையை […]

Continue Reading

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலைப்பக்கங்களுக்கு வாருங்கள். பிளாகுகள் (Blog) இனி தமிழ்மணம் வீசட்டும்!!! காசு மழை கொட்டட்டும். என்னன்னு யோசிக்கிறீங்களா? இதை படிங்க… கூகுளின் விளம்பர சேவையான ஆட்சென்ஸ் தற்போது தமிழ் மொழியை ஆதரிக்கிறது. அதாவது, இணையதளத்தில் எழுதப்பட்டு இருக்கும் ஆங்கில உரைக்கு ஏற்ப அல்லது அதற்கு தொடர்புடைய விளம்பரங்களையே கூகுள் காண்பித்தது. இனி தமிழ் மொழியையும் புரிந்து கொண்டு அதற்கேற்ற […]

Continue Reading